உலகைச்சுற்றி...

* சிரியாவில் டீர் எஸ்ஸார் பகுதியில் ஐ.எஸ். இயக்கத்தினருக்கும், உள்நாட்டு படைகளுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது.

Update: 2017-01-15 19:31 GMT
* சிரியாவில் டீர் எஸ்ஸார் பகுதியில் ஐ.எஸ். இயக்கத்தினருக்கும், உள்நாட்டு படைகளுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஐ.எஸ். இயக்கத்தினர் 20 பேரும், படையினர் 12 பேரும் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் கூறுகிறது.

* வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள உணவு விடுதி ஒன்றில், கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான ஜகாங்கிர் ஆலம் என்ற ராஜிப் நேற்று முன்தினம் இரவு எலங்கா என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்து மத அர்ச்சகர்கள் 2 பேர் கொல்லப்பட்டதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு என தகவல்கள் கூறுகின்றன.

* பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான், ஷியா எதிர்ப்பு ஆஹ்லே சுன்னத் வால் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா அகமது லுதியன்வியை சந்தித்து பேசியதை பாகிஸ்தான் மக்கள் கட்சி கடுமையாக சாடி உள்ளது. ஆனால் சவுத்ரி நிசார் அலி, தனது செயலை நியாயப்படுத்தி உள்ளார்.

* புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது துருக்கியில் இஸ்தான்புல் நகர இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 39 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய சீன நாட்டினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* கவாதார் துறைமுகம் மற்றும் வர்த்தக தட பாதுகாப்புக்காக 2 கப்பல்களை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்துள்ளது.

மேலும் செய்திகள்