இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2024-04-28 02:04 GMT

ஜகார்தா,

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜாவா தீவின் தெற்கு பகுதியில் உள்ள பஞ்சார் நகரில் இருந்து 102 கிலோமீட்டர் தொலைவில் 68 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. தலைநகர் ஜகார்தா, டிபோக், போகர், பெகசி, யோக்யகர்தா உள்பட பல்வேறு நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

ஆனாலும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கபடவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்