ஜப்பானில் பயங்கரம் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் சாவு?

மலைஏறும் பயிற்சிக்காக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களோடு வந்திருந்தனர். 52 மாணவர்களும், 11 ஆசிரியர்களும் மலைஏறும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

Update: 2017-03-27 21:30 GMT
டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள நாசூ என்ற பனிப்பிரதேச நகரில் பனிச்சறுக்கு போட்டி நடைபெறும் இடம் உள்ளது.

இங்கு நேற்று மலைஏறும் பயிற்சிக்காக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களோடு வந்திருந்தனர். 52 மாணவர்களும், 11 ஆசிரியர்களும் மலைஏறும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புபணியில் இறங்கினர். பனித்துகள்களுக்கு இடையில் இருந்து 8 பேர் உடல் அசைவு அற்ற நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அவர்களில் எத்தனை பேர் மாணவர்கள், ஆசிரியர்கள் என்பது உறுதிசெய்யப்படவில்லை.

மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் செய்திகள்