சவுதி அரேபியாவின் ஷாப்பிங் மால்களில் வெளிநாட்டவரை வேலையில் அமர்த்த தடை

சவுதி அரேபியாவின் ஷாப்பிங் மால்களில் இனி வெளிநாட்டவருக்கு பதில் அந்நாட்டவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-04-21 10:51 GMT
சவுதி அரேபியாவில் 2030-க்கான பொருளாதார சீர்திருத்த சட்டம் சமீபத்தில் வெளியானது. அதில் சவுதியில் சிறு, குறு தொழிலில் 15 லட்சம் பேர் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

15 லட்சத்தில் வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே சவுதியை சேர்ந்தவர்கள் என்பதும் மற்றவர்கள் வெளிநாட்டவர்கள் என்ற தகவலும் சவுதி அரசுக்கு தெரியவந்துள்ளது.

அதாவது சவுதி நாட்டில் சிறு தொழில்கள் நடைபெறும் துறைகளில் 5-ல் ஒருவர் மட்டுமே சவுதி நாட்டைச் சேர்ந்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சவுதி அரேபியாவின் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், அங்குள்ள ஷாப்பிங் மால்களில் இனி அந்நாட்டவர்களை மட்டும் வேலைக்கு நியமிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையால் பல வெளிநாட்டவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடலாம் என தெரிகிறது.

மேலும் செய்திகள்