உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் பணி துவங்கியது

சிலி நாட்டில் அடகாமா பாலைவனத்தில் உலகின் மிகர் பெரிய தொலைநோக்கி அமைக்கும் பணி துவங்கியது.

Update: 2017-05-27 00:18 GMT
அடகாமா பாலைவனம் (சிலி)

இத் தொலைநோக்கி அமைக்கப்பட்டப் பிறகு தற்போதிருக்கும் தொலைநோக்கிகளை விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இத் தொலைநோக்கி மூலம் செய்யப்பட்டும் ஆய்வுகள் வான்வெளியைப் பற்றிய நமது பார்வைகளை மாற்றிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதன் முக்கிய கண்ணாடி 39 மீட்டர்களாக இருக்கும் என்று (43 கஜங்கள்) கூறப்படுகிறது. 

தொலைநோக்கி அடகாமா பாலைவனத்தின் மத்தியிலுள்ள 3,000 மீட்டர் உயரமுள்ள மலையில் அமைக்கப்படுகிறது. இது 2024 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு என்று கூறப்படுகிறது. ”இங்கு அமைக்கப்படுவது தொலைநோக்கியை விட மேலான ஒன்று. அறிவியலின் சாத்தியக் கூறுகளின் சிறந்த உதாரணங்களில் ஒன்றை நாம் இங்கே காண்கிறோம்” என்றார் பணிகளை துவக்கி வைத்த சிலியின் அதிபர் மிஷேலே பாஷேலெட். 

அடகாமாவின் வறண்ட வானிலை தொலைநோக்கி ஆய்வாளர்களுக்கு சாதகமான ஒன்றாகும். வரவுள்ள 2020 ஆம் ஆண்டிற்குள் இப்பிரதேசம் உலகின் 70 சதவீத வானிலை ஆய்வுக் கருவிகளின் இருப்பிடமாக மாறும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய தென் வானிலை ஆய்வரங்கம் இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கிறது. இதற்கான செலவு என்ன என்பது பற்றி தெரியவில்லை என்றாலும் சுமார் ஒரு பில்லியன் யூரோக்களாவது இதற்கு செலவாகலாம் என்று ஐரோப்பிய தென் வானிலை ஆய்வரங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்