வடகொரியா ஹைட்ரஜன் குண்டை வெடிக்க செய்து சோதனை 6 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

வடகொரியா ஹைட்ரஜன் குண்டை வெடிக்க செய்து சோதனை செய்தது. இதனால் 6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.

Update: 2017-10-13 05:04 GMT

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.



கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது.




இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது. வடகொரியா மீது மிகக் கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வற்புறுத்தியது.

அமெரிக்க அதிபர் வடகொரியாவை ஏதாவது செய்தாக வேண்டும் என கூறினார். இதற்கு வடகொரியாவும் தனது கண்டனத்தை தெரிவித்தது.

இந்த நிலையில்  சில  மணி நேரங்களுக்கு  முன்னர் வட கொரியா மற்றும் அதனைஒட்டியுள்ள பகுதிகள் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 வட கொரிய ஹைட்ரஜன் குண்டை பரிசோதனை செய்து பார்த்திருக்க வேண்டும் என்ற தகவலும்  வெளியாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் சுமார் 6.00 யை எட்டியுள்ளது இந்த நிலநடுக்கம்.

பூகம்பம் முந்தைய அணுசக்தி சோதனைகள், நடந்த வடகிழக்கு பகுதியில்  29 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சுங்கீஜீகாமின் என்ற இடத்தில் உள்ளது.

முந்தைய வட கொரிய அணு சோதனைகளால் இந்த பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்கா கூறி உள்ளது.

 பூகம்பம் நிகழ்ந்தாலும், இந்த நிகழ்வின் இயல்பு (இயற்கையான அல்லது மனிதனால் தயாரிக்கப்பட்டது) உறுதியாக நாம் உறுதிப்படுத்த முடியாது.

வட கொரியாவின் முந்தைய ஆறு அணுசக்தி சோதனைகள் 4.3 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் பூகம்பங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இறுதியில் செப்டம்பர் 3 ம் தேதி  சோதனையால்  6.3 நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்