ஆப்கானிஸ்தான் கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தின் அருகே பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 26 பேர் உடல் சிதறி பலியாகினர்.

Update: 2018-03-21 09:50 GMT
காபூல்

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில்  ஈடுபட்டு வருகின்றனர். இன்று காபூல் பல்கலைக்கழகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்ததில் 26 பேர் உடல் சிதறி பலியாகினர்.

இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

ஆனால், இது தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை நடத்திய கார் குண்டு வெடிப்பில் இரண்டு பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்