வாக்குறுதி கொடுத்தப்படி பிரதமர் பயன்படுத்தும் சொகுசு கார்களை ஏலம் விட்டது இம்ரான்கான் அரசு

வாக்குறுதி கொடுத்தப்படி பிரதமர் பயன்படுத்தும் சொகுசு கார்களை இம்ரான்கான் அரசு ஏலம் விட்டது. #ImranKhan

Update: 2018-09-17 14:50 GMT

இஸ்லாமாபாத்,


 பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் அதிரடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிலொன்றுதான்,  பிரதமர் பயன்படுத்தும் விலை உயர்ந்த சொகுசு ரக கார்களை ஏலத்தில் விடுவது. இன்று அந்த வாக்குறுதியை இம்ரான் கான் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே அமைச்சரவை கூட்டத்தில் அதிபர், பிரதமர், தலைமை நீதிபதி, முதல்-அமைச்சர்கள், செனட் தலைவர்கள் மற்றும் தேசிய சட்டமன்ற பேச்சாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முதல் வகுப்பு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது.  

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானை மீட்டெடுக்க சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இம்ரான் கான் அரசு, பிரதமர்கள் பயன்பாட்டிற்காக உள்ள விலை உயர்ந்த சொகுசு ரக கார்களை ஏலத்தில் விற்பனை செய்தது. மெர்சிடஸ் பென்ஸ், 8 பி.எம்.டபிள்யூ கார்கள், 4,000சிசி திறன்  கொண்ட 2 புல்லட் ப்ரூப் வாகனங்கள், 16 டொயோட்டா கார்கள், 4 புல்லட் ப்ரூக் லேண்ட் குரூசர் கார்கள், லெக்ஸஸ் ரக கார்கள் உள்ளிட்ட 102 சொகுசு கார்களை வரும் செப்டம்பர் 17-ம் தேதி ஏலம் விடப்படுகிறது என்று ஏற்கனவே அரசு தரப்பு அறிக்கை வெளியானது. அதன்படி இன்று ஏலம் நடைபெற்றது. 

70 கார்கள் அதனுடைய மார்க்கெட் விலையைவிட அதிகமான விலைக்கு விற்பனையாகியுள்ளது என மீடியா தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் 8 எருமைகளையும் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோக பயன்படுத்தப்படாமல் உள்ள 4 ஹெலிகாப்டர்களும் விற்பனை செய்யப்படுகிறது. இனி ஏலம் விடப்போகும் கார்கள் குண்டு துளைக்காத கார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்