ராணுவ அணிவகுப்பில் தலை பாகையுடன் பங்கேற்ற முதல் சீக்கியர் போதை பொருள் சோதனையில் சிக்கினார்

இங்கிலாந்து ராணி எலிசபெத் பிறந்த நாள் கொண்டாட்ட ராணுவ அணிவகுப்பில் தலை பாகை அணிந்து பங்கேற்ற முதல் சீக்கியர் போதை பொருள் சோதனையில் சிக்கியுள்ளார்.

Update: 2018-09-25 11:04 GMT

லண்டன்,

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் ஒரு சனி கிழமையில் கோலாகலமுடன் கொண்டாடப்படும்.  இந்த நாளில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, இசை கச்சேரி மற்றும் குதிரை வீரர்கள் அணிவகுத்து செல்வது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த நிலையில் கடந்த ஜூனில் இங்கிலாந்து ராணியின் 92வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நடந்த ராணுவ அணிவகுப்பில் சீக்கிய வீரர் சரண்பிரீத் சிங் லால் தலை பாகையுடன் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.   ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்ற இந்த அணிவகுப்பில் மற்ற வீரர்களில் இருந்து வேறுபட்டு தலை பாகையை அணிந்து சென்ற முதல் சீக்கியர் என்ற வரலாற்று பெருமையை பெற்றார்.

இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த அவர் குழந்தையாக இருந்தபொழுது தனது குடும்பத்துடன் இங்கிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்து உள்ளார்.  அதன்பின் 2016ம் ஆண்டு ஜனவரியில் அவர் இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், கோகைன் என்ற போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் சிக்கியுள்ளார்.

கடந்த வாரம் நடந்த சோதனையில் இவர் அதிக அளவு கோகைன் என்ற போதை பொருளை பயன்படுத்தி உள்ளார் என பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனை அறிந்து ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைந்தோம்.  அவர் கவுரவிக்கப்பட்ட பிரபல நபராக தெரிந்தவர்.  ஆனால் அவர் விவகாரத்தினை இழுத்து வந்துள்ளார் என இதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

அவர்  போதை பொருள் பயன்படுத்தியது பற்றி ராணுவ குடியிருப்பு ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.  இந்த காவலர்கள் அரண்மனையில் பொது பணிகளில் ஈடுபட கூடியவர்கள்.  இது அவமதிப்பிற்குரிய செயல்.  இதனால் லால் பணியில் தொடருவாரா? என்பது பற்றி அவரது உயரதிகாரியே முடிவு செய்வார்.  ஆனால் ஏ வகை போதை பொருளை பயன்படுத்தி அந்த நபர் பிடிபட்டால் அவர் பணியில் இருந்து நீக்கப்படுவது வழக்கம் என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்