ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க அமெரிக்காவுக்கு, சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

அணு ஆயுத குறைப்பு தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் கடந்த 2015–ம் ஆண்டு ஈரான் ஒப்பந்தம் செய்துகொண்டது.

Update: 2018-10-03 23:45 GMT

திஹேக்,

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் அப்போதே குறை கூறிவந்தார்.

பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தன்னிச்சையாக அறிவித்தார். அது மட்டுமின்றி ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளையும் அவர் விதித்தார். இதில் முக்கியமாக மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த பொருளாதார தடையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது, ஈரான். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி அப்துல்ஹாவி அகமது யூசுப், நேற்று அமெரிக்காவுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவு மற்றும் விவசாய பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீதான தடைகளை விலக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விமான பாகங்கள் மீதான தடைகளையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்