பாகிஸ்தானில் சாலை விபத்து; 19 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் சாலை விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.

Update: 2018-10-22 01:57 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் தேரா காஜி கான் நகரில் புல் காஜி காட் பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 19 பேர் உயிரிழந்தனர்.  40 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுபற்றி மீட்பு மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூறும்பொழுது, 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  காயமடைந்தவர்களில் 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் இம்ரான் கான் மற்றும் அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோர் இரங்கல் மற்றும் வருத்தத்தினை தெரிவித்துள்ளனர்.  காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கும்படியும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்