உலகைச் சுற்றி...

வங்காளதேசத்தில் அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி ஆதரவு பத்திரிகை ஆசிரியர் உசேன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-10-23 23:00 GMT

* பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடத்தல் பெட்ரோலை கொண்டு சென்ற வேனும், லாரியும் மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 3 கார்கள் எரிந்து நாசமாகின.

* ஆஸ்திரேலியாவில் போர்ட் அகஸ்டா நகரில் நகராட்சி கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகிற சீக்கியரான சன்னி சிங், இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். இது தனக்கு மிகுந்த வருத்தம் அளித்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

* வங்காளதேசத்தில் அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி ஆதரவு பத்திரிகை ஆசிரியர் உசேன் கைது செய்யப்பட்டுள்ளார். டி.வி. விவாதம் ஒன்றில் அவர் பெண் பத்திரிகையாளர் ஒருவரை தகாத வார்த்தைகள் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

* தைவானில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6 புள்ளிகளாக பதிவானது. நாடு முழுவதும் உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீதிகளுக்கு வந்து தஞ்சம் புகுந்தனர். எனினும் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று சவுதி அரேபியா போய்ச் சேர்ந்தார்.

* இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு அழுத்தம் தர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தயாராகி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்