உலகைச்சுற்றி...

* தீபாவளி பண்டிகையையொட்டி, ஐ.நா. அஞ்சல் முகமை சிறப்பு தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது. இதற்காக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி அக்பருதீன் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். இதற்கிடையே தீபாவளி வாழ்த்து தெரிவித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ செய்தி வெளியிட்டார். அதில் அவர் இருளை ஒளி வீழ்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் பண்டிகை தீபாவளி என கூறி உள்ளார்.

Update: 2018-11-07 21:30 GMT
* இங்கிலாந்தில் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்கிரிபாலையும், அவரது மகள் யுலியாவையும் ரசாயன தாக்குதல் நடத்தி கொல்ல நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ரஷியா மீது அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதற்காக ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

* ரஷியா, சீனா, அமெரிக்காவுக்கு எதிராக நிற்கக்கூடிய வகையில் பலம் வாய்ந்த உண்மையான ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் அர்ஜெண்டினாவில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின்போது சந்தித்து பேச உள்ளனர். இதை ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.

* ஆப்கானிஸ்தானில் பான்சிர் மாகாணத்தில் உள்ள அவசரகால ஆஸ்பத்திரியில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் இறந்துள்ளனர். இதற்கான காரணம் தெரியவரவில்லை.

மேலும் செய்திகள்