உலகைச்சுற்றி...

ஏமனில் துறைமுக நகரான ஹூதய்தாவில் உள்நாட்டு சண்டை வலுத்து வருகிறது.

Update: 2018-11-23 22:30 GMT

* ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் 2015-ம் ஆண்டு, போலீஸ் கணக்காளர் ஒருவரை 15 வயது சிறுவன் சுட்டுக்கொல்ல சதித்திட்டம் தீட்டித்தந்து, வழிநடத்திய மிலாத் அடாய் (வயது 38) என்பவருக்கு 28½ ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

* ஹவானா நகரில் கியூபா அதிபர் மிக்கேல் டயஸ் கேனலை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஜ் சந்தித்துப் பேசினார். இரு தரப்பிலும் வர்த்தகம், கலாசாரம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

* ஏமனில் துறைமுக நகரான ஹூதய்தாவில் உள்நாட்டு சண்டை வலுத்து வருகிறது. இந்த சண்டையினால் குடியிருப்பு பகுதிகள், அல் தாவ்ரா மருத்துவமனை போன்றவை பாதிக்கப்பட்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ராணுவத்தையும், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களையும் ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பு ‘யுனிசெப்’ கேட்டுக்கொண்டுள்ளது.

* பிரேசில் நாட்டில் குழந்தைகளின் ஆபாச படங்கள் தயாரித்து வெளியிடுகிறவர்களை குறிவைத்து போலீஸ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. இதில் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* கென்யாவில் சட்டவிரோத பிரிவினைவாத அமைப்புகளை சேர்ந்த 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்