நியூசிலாந்து: இறந்து கரை ஒதுங்கிய 51 திமிங்கிலங்கள்

நியூசிலாந்து கடற்கரையில் இறந்தநிலையில் 51 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

Update: 2018-11-30 17:55 GMT
வெல்லிங்டன்,

நியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப் பகுதியில் உள்ள சத்தாம் தீவில், 80 முதல் 90 வரையிலான பைலட் வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது.

அவற்றில் 30 முதல் 40 வரையிலான திமிங்கிலங்கள் தாமாகவே மீண்டும் மிதந்து கடலுக்குள் சென்று விட்டன. ஆனால் மீதமுள்ள 51 திமிங்கிலங்கள் இறந்து கரை ஒதுங்கி விட்டன.

திமிங்கிலங்களின் இறப்புக்கு சரியான காரணம் அறியப்படவில்லை. நோய், பாதை குழப்பம், நிலவியல் சார்ந்த காரணங்கள், வேகமாக வீழும் அலை, ஏதேனும் எதிரிகளால் துரத்தப்படுதல் அல்லது மோசமான காலநிலை ஆகியவை காரணமாக இருக்கலாம் என நியூசிலாந்து இயற்கை வள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நியூசிலாந்தின் ஸ்டீவர்ட் தீவில் 145 பைலட் வகை திமிங்கிலங்கள் இதேபோலவே இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்