உலகைச்சுற்றி...

இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர்.

Update: 2018-12-09 22:15 GMT
* பிரான்ஸ் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. அங்கு பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,723 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு மத்தியில் போராட்டத்தை வழிநடத்திச்செல்கிற மஞ்சள் சட்டை இயக்கத்தினர் நாட்டின் ஒன்றுமையை மீட்டெடுக்க வேண்டும் என்று பிரதமர் எட்வர்டு பிலிப்பி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர். 236 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

* பொலிவியா நாட்டில் 2 மினி பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 17 பேர் பலியாகினர்.

* ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான வரைவு ஒப்பந்தத்தின்மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டிய ஓட்டெடுப்பை பிரதமர் தெரசா மே ஒத்தி போடக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடந்த இசை, நடன நிகழ்ச்சியின்போது போதைப்பொருளை அளவு கடந்து உட்கொண்ட ஒருவர் பலியானார். 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

* அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்க உளவு செயற்கைகோள், ‘டெல்டா 4’ கனரக ராக்கெட்டுடன் விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் கடைசி வினாடிகளில் இது ஒத்திபோடப்பட்டது.

* ஜப்பான் நாட்டின் கடற்படையில் நீர்மூழ்கி கப்பலில் பணியாற்ற வீராங்கனைகளை தேர்வு செய்து அமர்த்தப்போகிறார்கள்.

* பாகிஸ்தானில் கராச்சி நகரில், நேற்று முன்தினம் இரவு நடந்த மத நிகழ்ச்சியில் குண்டுவெடித்தது. இதில் ஒரு பெண் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.


மேலும் செய்திகள்