இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவானது.

Update: 2018-12-28 10:42 GMT
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில்  இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகி உள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பல விநாடிகள் நீடித்தது என்று அமெரிக்க ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலநடுக்கத்துக்கு சுனாமி தோற்றுவிக்கும் சக்தி இல்லை. எனவே, மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். 700-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்