உலகைச்சுற்றி

பாகிஸ்தானின் பிரபல பெண் எழுத்தாளர் கலிதா ஹூசைன் உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.

Update: 2019-01-12 22:04 GMT
* அமெரிக்காவின் எல்லையோர பாதுகாப்பிற்காக 25 பில்லியின் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா ஒன்றை அமெரிக்க செனட்டர்கள் ஜெர்ரி மோரன் மற்றும் ராப் போர்ட்மேன் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.

* மாசிடோனியா நாட்டின் பெயரை வடக்கு மாசிடோனிய குடியரசு என பெயர் மாற்றம் செய்து அந்நாட்டின் நாடாளுமன்றம் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது நடந்த ஓட்டெடுப்பில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 27 ஆண்டுகாலம் நிலவி வந்த இப்பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டு உள்ளது.

* பாகிஸ்தானின் பிரபல பெண் எழுத்தாளர் கலிதா ஹூசைன் உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.

* ஆப்கானிஸ்தானில் நனோகர் மாகாணத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் தலீபான் பயங்கரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

* வெனிசூலா நாட்டின் அதிபராக மடுரோ தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் சட்டவிரோதமானது என்றும் எனவே அதை ஏற்கப்போவதில்லை எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டன் தெரிவித்து உள்ளார்.

* அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவரான துல்சி கப்பார்ட் அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்