நேபாளத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மந்திரி உள்பட 7 பேர் சாவு

நேபாள விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்தவர் ரபிந்திர அதிகாரி (வயது 39).

Update: 2019-02-27 22:30 GMT

காட்மாண்டு, 

சுகன் தண்டாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு அங்குள்ள கோவில் ஒன்றுக்கு ஹெலிகாப்டரில் ரபிந்திர அதிகாரி சென்றார். அவருடன் பிரதமரின் தனிப்பட்ட உதவியாளர் யுபராஜ் டகல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சக அதிகாரிகள் உள்பட 5 பேர் இருந்தனர்.

இந்த ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் திடீரென மாயமானது. அது குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், டேபிள்ஜங் மாவட்டத்தின் சக்சே டாடா மலையில் மோதி தீப்பிடித்தது. இதில் மந்திரி ரபிந்திர அதிகாரி மற்றும் விமானி பிரபாகர் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை.

ஹெலிகாப்டர் விபத்தில் மந்திரி உயிரிழந்த சம்பவம் நேபாள அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் விரைந்தனர். மேலும் பிரதமர் தலைமையில் மந்திரிசபை கூட்டம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது.

மேலும் செய்திகள்