உலகைச்சுற்றி....

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள கடைசி பகுதியை மீட்க அமெரிக்க கூட்டுப்படைகள் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.

Update: 2019-03-03 22:00 GMT

* நைஜீரியாவின் பெயில்சா மாகாணத்தில் உள்ள நெம்பே கிங்டம் நகரில் எண்ணெய் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, பயங்கர தீவிபத்து நேரிட்டது. இதில் சிக்கி 50–க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது

* சிரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஹமா மாகாணத்தில் ராணுவவீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 20 வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதே சமயம் தாக்குதலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

* பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீப், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது மூத்த சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார். அப்போது அவர் இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் குறித்து நவாஸ் ஷெரீப்பிடம் விளக்கினார்.

* அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கு இந்திய அமெரிக்கரரான மேதா நரவேகர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள கடைசி பகுதியை மீட்க அமெரிக்க கூட்டுப்படைகள் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதலுக்கு ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

* அர்ஜென்டினாவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்தெல்அஜிஸ் பெடோப்ளிகா மீண்டும் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் பலியானார். 180–க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்