பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பூமியை காப்பாற்ற போராடும் சிறுமி - அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பூமியை காப்பாற்ற போராடும் சிறுமிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-03-14 22:08 GMT
ஓஸ்லோ,

சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.

இதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து கிரேட்டா தன்பர்க், தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவிட்டு உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினார்.

பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த ஏராளமான கூட்டங்களிலும் பங்கேற்று வரும் இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐ.நா.வின் உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும், கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக பொருளாதார மன்றத்திலும் பங்கேற்று உரையாற்றி உள்ளார்.

இந்த நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரட்டி ஆண்ட்ரே, “பூமியைக் காப்பாற்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் கிரேட்டா, நோபல் பரிசுக்கு முழுமையான தகுதி உடையவர்” என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்