ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள்; 30 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2019-03-21 11:23 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் புதுவருட கொண்டாட்டங்கள் இன்று நடந்து வருகின்றன.  இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  காபூல் நகரில் மேற்கு பகுதியில் அமைந்த சாகி என்ற புனித ஸ்தலம் அருகே கொண்டாட்டத்தினை முன்னிட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், புனித ஸ்தலத்தினை நோக்கி பெருமளவில் சென்ற மக்கள் கூட்டத்தின் மீது தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் 30 பேர் பலியாகி உள்ளனர்.  23 பேர் காயமடைந்து உள்ளனர்.  பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.  அந்நாட்டு பொது சுகாதார அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள தகவலில், 6 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  எச்சரிக்கை விடும் வகையில் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சம்பவத்தினை அடுத்து மீட்பு குழுக்கள், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தனி அமைப்போ அல்லது குழுவோ பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்