இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு, பின்னர் 20 முறைக்கும் மேல் பல்வேறு அளவுகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

Update: 2019-04-13 06:22 GMT
இந்தோனேசியாவின் மையப்பகுதியில் உள்ள சுலவேசி மாகாணத்தில் நேற்றிரவு 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்  கடல்பகுதியில் அதிர்வு ஏற்பட்டதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் கணக்கிடப்படாத நிலையில், நிலநடுக்கத்திற்கு பின்னர் 20 முறைக்கும் மேல் பல்வேறு அளவுகளில் நில அதிர்வு உணரப்பட்டது. அவற்றில் அதிகபட்சமாக 5.6 ரிக்டர் அளவு வரையிலும், குறைந்தபட்சமாக 3.4 ரிக்டர் அளவு வரையிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக , இந்தோனேசிய வானிலை மற்றும் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்