பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் அலறியடித்து ஓட்டம்

பிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் அலறியடித்து ஓடினர்.

Update: 2019-04-22 13:12 GMT
மணிலா,

பிலிப்பைன்சில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.  மணிலா நகரின் வடமேற்கில் 100 கி.மீட்டர் தொலைவில் கேஸ்டில்லெஜோஸ் என்ற நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின.  இதனால் அங்கு பணிபுரிந்து வந்த அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்து அலறியபடி வெளியேறி தெருக்களில் இறங்கி தப்பி ஓடினர்.

எனினும், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  அவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.  நிலநடுக்கத்தினால் சுனாமி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்