உலகைச் சுற்றி...

வடகொரியாவில் நேற்று முன்தினம் ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தென்கொரியா அறிவித்தது.

Update: 2019-05-05 22:45 GMT

* வடகொரியாவில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தென்கொரியா அறிவித்தது. இப்போது அதை வடகொரியாவும் உறுதி செய்துள்ளது. குறுகிய தொலைவில் சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் வாய்ந்த இந்த ஏவுகணை சோதனைகளை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையிட்டார் என அரசு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி திட்டங்களுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த துர்கா டி அகர்வால், சுசிலா தம்பதியர் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். அதை கவுரவிக்கிற வகையில் அந்த பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் வளாகத்துக்கு அவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* துருக்கியில் குர்து இன போராளிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு ராணுவம் நடத்திய பதிலடியில் 28 குர்து இன போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

* சிரியாவில் இத்லிப் மாகாணத்தில் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு கிளர்ச்சியாளர்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* துனிசியா நாட்டில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்