உலகைச்சுற்றி...

கவுதமலா நாட்டின் தலைநகர் கவுதமலா நகரில் உள்ள சிறையில் கைதிகள் இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.

Update: 2019-05-08 22:30 GMT

* பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீவி என்கிற கிறிஸ்தவ பெண்ணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஆசியா பீவி தனது குடும்பத்தோடு கனடாவுக்கு சென்றுவிட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வெனிசூலா உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவரான கிறிஸ்டோபர், இடைக் கால அதிபர் ஜூவான் குவைடோவுடன் கைகோர்த்ததை தொடர்ந்து, அவர் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து பொருளாதார தடைகளையும் அமெரிக்கா திரும்பப்பெற்றது.

* அமெரிக்கா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைக்காக துணை பிரதமர் லியு ஹி உள்பட உயர்மட்ட பிரதிநிதிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப சீனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* கவுதமலா நாட்டின் தலைநகர் கவுதமலா நகரில் உள்ள சிறையில் கைதிகள் இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. அதனை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்