பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.7 ஆக பதிவு

பப்புவா நியூ கினியாவின் கடலோர பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-05-16 06:37 GMT
பப்புவா நியூ கினியாவின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.  டாரன் என்ற மலை பகுதிக்கு தென்மேற்கே 95 கி.மீட்டர் தொலைவில் இதன் அதிர்வுகள் பதிவாகி உள்ளன.

இந்நிலநடுக்கம் 25.3 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனால் ஏற்பட்ட காயங்கள் அல்லது சேதவிவரங்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

பப்புவா நியூ கினியாவில் நேற்று ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியது.  இதனை தொடர்ந்து சுனாமி பேரலைகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், அந்நாட்டுக்கு அருகில் உள்ள சாலமன் தீவு பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.  இந்நிலையில், இன்று மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்