உலகைச்சுற்றி...

இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் 18 பேருடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென கடலில் மூழ்கியது.

Update: 2019-06-05 22:45 GMT

* இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் உள்ள மரோவலி நகருக்கு அருகே 18 பேருடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென கடலில் மூழ்கியது. இதில் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு உள்ள நிலையில், 17 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

* ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் அல் காயிம் நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் சுதாரித்துக்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* சூடானில் மக்களாட்சி கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 60-ஐ தொட்டுவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் 23-வது சர்வதேச பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்வதற்காக சீன அதிபர் ஜின்பிங் ரஷியா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது, அவர் அந்நாட்டின் அதிபர் புதினை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.

மேலும் செய்திகள்