உலகைச்சுற்றி...

ஹோண்டுராஸ் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் காரணமாக அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

Update: 2019-06-22 23:00 GMT

* ஈரான் மீது ஒரு குண்டு வெடித்தால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களை தீயிட்டுக்கொளுத்துவோம் என்று ஈரான் ராணுவ ஜெனரலின் செய்தி தொடர்பாளர் அபோல்பாசில் ஷெகார்சி மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே ஈரான் பிரச்சினை பற்றி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

* துனிசியா நாட்டின் அதிபர் டெஜி கெயிட் எசெப்சி திடீர் உடல்நலக்குறைவால் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

* ரஷியாவுக்கும், ஜார்ஜியா நாட்டுக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இதன் காரணமாக ஜார்ஜியா நாட்டுக்கு பயணிகள் விமானங்களை இயக்க வேண்டாம் என்று ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

* ஹோண்டுராஸ் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் காரணமாக அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்த போராட்டத்தில் அங்கு 3 பேர் உயிரிழந்தனர்.

* அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் களம் இறங்கியுள்ள செனட் சபை எம்.பி. எலிசபெத் வாரன், தான் வெற்றி பெற்றால் அங்கு தனியார் சிறைகளை ஒழித்துக்கட்டப்போவதாக டுவிட்டரில் சபத மிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்