அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற அதிகபட்ச வருமானம் தேவை -புதிய விதிமுறை

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கு அதிகபட்ச வருமானம் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-13 07:46 GMT
வாஷிங்டன்

அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கையை  கட்டுப்படுத்துவதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிரீன் கார்டு பெறுவதற்கான புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி  அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று குடியேறுவதற்கு இந்தியா உட்பட மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வருமானம் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரசின் மருத்துவக் காப்பீட்டு, ரேஷன் மானியம் போன்ற நலத்திட்டங்களை அவர்கள் சார்ந்திருக்காமல் வருமானம் அதிகபடியாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் குறைந்த அளவு வருமானத்துடன் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் ஏராளமானோர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் 4 லட்சம்  கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் இதனால் பாதிக்கப்பட  இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்கர்களுக்கே அரசின் நலத்திட்டங்கள் அதிக அளவில் சென்றடையும் என்றும் அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்