27-ம் தேதி ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியை சந்திக்கிறார் - ஜெயசங்கர்

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கர் வரும் 27 ஆம் தேதி ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2019-08-22 13:22 GMT
மாஸ்கோ,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி  ஜெய்சங்கர் வரும் 27 ம் தேதி ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை மாஸ்கோவில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு உள்ள இருதரப்பு ஒத்துழைப்பை  வலுப்படுத்துவதற்கான வழிகளை அவர்கள் கலந்து ஆலோசிக்க இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்