பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பாடகி பொழுதுபோக்கு துறையிலிருந்து விலகல்

பாகிஸ்தான் பாடகி ரபி பிர்சாடா தனது தனிப்பட்ட படங்கள் ஆன்லைனில் கசிந்ததை அடுத்து, பொழுதுபோக்கு துறையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

Update: 2019-11-05 07:58 GMT
இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி ரபி பிர்ஜடா. இவர் இந்திய பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.

அதில், இடுப்பில் கைகளை வைத்தபடி, உடலில் டைனமைட்டுடன் கூடிய  வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு உள்ளார். மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக விரும்புகிறேன் என்று அதனருகே பதிவிட்டு இருந்தார்.

இதற்கு சிலர் அவரை முட்டாள் என்றும், சிலர் அதிவிரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்றும் விமர்சித்து இருந்தனர். இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக லாகூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் சமூக ஊடக தளங்களில் வைரலாகிய தனது புகைப்படம் தொடர்பாக, ரபி தனது தனிப்பட்ட ரகசியங்கள் திருடப்பட்டதாக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பில் புகார் அளித்து உள்ளார். 

ரபி பிர்ஜடா தனது தனிப்பட்ட படங்கள் ஆன்லைனில் கசிந்ததை அடுத்து, பொழுதுபோக்கு துறையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக நேற்று அறிவித்து உள்ளார்.

"நான், ரபி பிர்ஜடா, நான் பொழுதுபோக்கு துறையிலிருந்து வெளியேறுகிறேன். அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பான். மேலும் எனக்கு ஆதரவாக மக்களின் இதயங்களை பெற முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்