கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு

கிரீஸ் நாட்டின் கிரீக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.

Update: 2019-12-11 22:22 GMT

* ஆப்கானிஸ்தானில் பார்வான் மாகாணம் பாக்ராம் நகரில் அமெரிக்க விமானப்படை தளம் அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறியது. அதனை தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பெண் பலியானார். சுமார் 80 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மருத்துவ சிகிச்சை பெற தனக்கு ஜாமீன் வழங்க கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சர்தாரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

* கிரீஸ் நாட்டின் கிரீக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கு, ராணுவ நிதியில் இருந்து 3.6 பில்லியன் டாலர்களை ஒதுக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த டெக்சாஸ் நகர கோர்ட்டு, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ராணுவ நிதியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

மேலும் செய்திகள்