சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம்; 4 பேர் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் சூழ்ந்ததில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-12-15 03:22 GMT
செங்குடு,

சீனாவின் தென்மேற்கில் காங்சியான் கவுன்டி பகுதியில் சிச்சுவான் நிலக்கரி தொழிற்சாலை குழுமத்தின் பராங் நிறுவனம் சார்பில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதில் சுரங்க தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், அந்த சுரங்கத்தில் நீர் புகுந்து, பெருக்கெடுத்து ஓடியது.  சுரங்கத்திற்குள் வெள்ளம் முழுவதும் சூழ்ந்தது.  இதனால் சுரங்க தொழிலாளர்கள் வெள்ள நீரில் சிக்கினர்.  அவர்களில் 4 பேர் பலியாகி விட்டனர்.  14 பேர் இன்னும் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் உள்ளனர்.

இதுபற்றிய தகவல்  அறிந்து தொழில் முறையிலான மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  அவர்களுடன் 200 ஊழியர்களும் மீட்பு பணியில் இணைந்து உள்ளனர்.  எனினும் சில சுரங்க பகுதிகளில் தொடர்பு கொள்வதில் இடையூறு ஏற்பட்டு உள்ளது.  இதனால் சுரங்கத்தில் சிக்கி உள்ளவர்களை கண்டறிய முடியவில்லை.  தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்