ருமேனியாவில் அறுவை சிகிச்சையின்போது மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்

ருமேனியாவில் அறுவை சிகிச்சையின்போது எதிர்பாராத விதமாக தீ பற்றியது.

Update: 2019-12-31 23:00 GMT
புகாரெஸ்ட்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவின் தலைநகர் புகாரெஸ்டை சேர்ந்த 66 வயதான மூதாட்டி ஒருவர் கணைய புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது டாக்டர்கள் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியை பயன்படுத்தினர். மின்சார கத்தியை பயன்படுத்தி மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

அப்போது மின்சாரமும், ஆல்கஹாலும் எதிர்வினையாற்றியதால் மூதாட்டி மீது தீ பற்றியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தண்ணீரை ஊற்றி அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் அவருக்கு 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டதின் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்