ஈரான் ராணுவ தளபதி சுலைமானி இறுதி ஊர்வலம் : நெரிசலில் சிக்கி 35 பேர் பலி

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-01-07 11:03 GMT
தெக்ரான்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். அவர் ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈராக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடலுக்கு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று இறுதி சடங்குகள் நடந்தன. அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சுலைமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு லட்சக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். 

அவர்கள் அனைவரும் கறுப்பு நிற உடையில் வந்திருந்தனர். இதனால் டெஹ்ரான் நகரமே கறுப்பு நிறமாக மாறியது போல காட்சியளித்தது. மக்கள் தங்கள் கைகளில் கறுப்பு மற்றும் ஈரான் நாட்டு கொடிகளை ஏந்தியபடி அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். இறுதி சடங்கின்போது, அயதுல்லா அலி காமெனி கண்ணீர் விட்டுக் கதறி  அழுதார்.

இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி  35 பேர் பலியானதாக  ஈரானின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும் 45 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறி உள்ளது.

மேலும் செய்திகள்