இந்தோனேசிய ஆற்றில் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி

இந்தோனேசிய ஆற்றில் படகுகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

Update: 2020-03-11 22:06 GMT
ஜகார்த்தா,

நெதர்லாந்து நாட்டின் மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் தனது மனைவியுடன் இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்நாட்டின் கலிமண்டன் மாகாணத்தில் உள்ள சில பகுதிகளையும் அரச தம்பதிகள் பார்வையிட உள்ளனர்.

அங்கு அவர்கள் செபங்காவ் ஆற்றில் படகு பயணமும் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையொட்டி செபங்காவ் ஆற்று பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் பணியில் இந்தோேனசிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக அதிகாரிகள் செபங்காவ் ஆற்றில் படகில் பயணம் செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் எதிர்திசையில் வேகமாக வந்த சுற்றுலா படகு ஒன்று அதிகாரிகள் இருந்த படகு மீது பயங்கரமாக மோதியது.

இதில், சுற்றுலா பயணிகள் வந்த படகு ஆற்றில் கவிழ்ந்தது. பலர் நீரில் மூழ்கினர். இதையடுத்து உடனடியாக மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.

எனினும் 7 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 6 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நெதர்லாந்து மன்னர் அலெக்சாண்டர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்