திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.1 புள்ளிகளாக பதிவு

திபெத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது.

Update: 2020-03-13 23:57 GMT

* சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான திபெத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* எகிப்து நாட்டை நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த புயல் தாக்கிய நிலையில் அங்குள்ள அஸ்வான் மாகாணத்தில் மோசமான வானிலை காரணமாக 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ராக்கெட் குண்டு வீச்சில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக அங்குள்ள ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் ஆயுதக்கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் பல நிர்மூலமாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்