கத்தார் ஏர்வேஸ் தனது விமானங்களை தொடர்ந்து இயக்கும்-தலைமை நிர்வாக அதிகாரி

கத்தார் ஏர்வேஸ் தனது விமானங்களை தேவை இருக்கும் வரை தொடர்ந்து இயக்கும் என்று விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-29 09:49 GMT
படம்: shutterstock.com/Dmitry Birin
 துபாய்

கொரோனா வைரஸ் 199 நாடுகளுக்கு பரவுயுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தலை அமல்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் எல்லை மூடப்பட்டதை அடுத்து பெரும்பாலான விமான நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் தொடர்ந்து செயல்படும் உலகளாவிய விமான நிறுவனங்களில் கத்தார் ஏர்வேஸ் ஒன்றாகும்.

அரசுக்கு சொந்தமான  கத்தார் ஏர்வேஸ் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது, பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடுவதைக் கண்ட தொற்றுநோயால் சிக்கித் தவிக்கும் பயணிகளை அவர்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்கிறது.

இன்று மார்ச் 29 முதல் ஏப்ரல் 11 வரை 1,800 விமானங்களை இயக்க விமான நிறுவனம் தற்போது திட்டமிட்டுள்ளது, பெரும்பாலான விமானங்கள் 50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவே பயணிகள் பயணிக்கின்றன.

கத்தார் ஏர்வேஸ் இறுதியில் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற வேண்டியிருக்கும் என்று தலைமை நிர்வாகி அக்பர் அல்-பேக்கர்  ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்,  சில ஊழியர்கள் நெருக்கடியின் விளைவாக ஊதியத்துடன் மற்றும் ஊதியம் இல்லாமலும் விடுப்பு எடுக்க முடிவு செய்துள்ளனர், ஆனால் எந்த ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்று கூறினார்.

"உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களிடமிருந்தும், சில நாடுகளில் உள்ள தூதரகங்களிடமிருந்தும், கத்தார் ஏர்வேஸை சேவையை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக " என்று பேக்கர் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்