ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்; பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-04-03 06:35 GMT
மணிலா, 

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சிலும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சில் தற்போதைய நிலவரப்படி  2,633 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து  107 பேர் மீண்ட நிலையில், 51 - பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில்,   பிலிப்பைன்சிலும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில், ஊரடங்கு  உத்தரவை மீறும் மக்கள் போலீஸார் மற்றும் ராணுவத்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்