இலங்கையில் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு நீட்டிப்பு

இலங்கையில் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-25 14:29 GMT
Photo Credit: AP
கொழும்பு,

இலங்கையிலும் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. இலங்கையில் தற்போதைய நிலவரப்படி 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் அபாயம் உள்ள 4 மாவட்டங்களில் ஊரடங்கு மே 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.  இலங்கையில் நேற்று  ஒருநாளில் மட்டும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை எடுத்ததாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில்,  கொழும்பு, கம்பா, கலுதரா, புட்டாளம் ஆகிய  ஆகிய 4 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் அபாயம் உள்ள மாவடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு வரும் 27 ஆம் தேதி பகுதியளவு தளர்த்தப்பட உள்ளது. 

மேலும் செய்திகள்