இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்தது; 10 பேர் மாயம்

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் மாயமாகினர்.

Update: 2020-06-21 00:00 GMT
ஜகார்த்தா,

இந்தோனோசியாவில் கிரகடாவ் எரிமலைக்கு அருகேயுள்ள ரகட்டா தீவில் இருந்து கே.எம்.புஸ்பிட்டா ஜெயா என்ற படகு புறப்பட்டு சென்றது. இதில் மொத்தம் 16 பேர் பயணம் செய்தனர்.

இந்தப் படகு சற்றும் எதிர்பாராத வகையில், இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுந்தா ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்த தகவல் அறிந்ததும் தேசிய தேடல் மட்டும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டு விட்டனர்.

இன்னும் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது எனவும், இந்த பணியில் ஏராளமான மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தேசிய தேடல் மற்றும் மீட்பு படை அலுவலக செய்தி தொடர்பாளர் யூசுப் லத்தீப் தெரிவித்தார்.

பரந்த தீவு கூட்டங்களை கொண்டுள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி படகு விபத்துகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு தரத்தை தளர்த்துவதுதான் இத்தகைய படகு விபத்து துயரங்களுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்