அமெரிக்காவில் மேலும் 44,698 பேருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் புதிதாக 44,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-30 01:19 GMT
வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. வைரஸ் முதன் முதலாக வெளிப்பட்டு ஏறத்தாழ 6 மாதங்களை கடந்து இருந்தாலும் இதன் ஆட்டம் அடங்கவில்லை.  உலக நாடுகளை ஒருசேர விழிபிதுங்க வைத்துக்கொண்டு இருக்கும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த வல்லரசு நாடான அமெரிக்காவே திண்டாடி வருகிறது. 

அமெரிக்காவில் புதிதாக 44,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 2,681,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனாவுக்கு  128,777- பேர் பலியாகியுள்ளனர். உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 13 லட்சம் பாதிப்புடன்  பிரேசில் 2-ஆம் இடம் வகிக்கிறது. 

மேலும் செய்திகள்