உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Update: 2020-07-21 01:48 GMT
ஜெனீவா,

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 48 லட்சத்து 45 ஆயிரத்து 241 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 53 லட்சத்து 33 ஆயிரத்து 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 805 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 88 லட்சத்து 98 ஆயிரத்து 749 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 18,49,989
பிரேசில் - 14,09,202
இந்தியா - 7,00,086    
ரஷியா - 5,53,602
சிலி - 3,03,992
பெரு - 2,45,081
ஈரான் - 2,40,087
மெக்சிகோ - 2,17,423
பாகிஸ்தான் - 2,05,929
சவுதி அரேபியா - 2,03,259
துருக்கி - 2,03,002

மேலும் செய்திகள்