இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் பறந்த சாம்பல் துகள்கள்

இந்தோனேசியாவில் எரிமலை இன்று வெடித்ததில், 16,400 அடி உயரத்திற்கு வானத்தில் சாம்பல் துகள்கள் பறந்தன.

Update: 2020-08-10 10:21 GMT
இந்தோனேசியா,

இந்தோனேசியாவில் சுமார் 400 ஆண்டுகள் பழைமையான மற்றும் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 120 எரிமலைகள் உள்ளன. இதில் சினாபங் என்ற எரிமலை அவ்வப்போது வெடித்து அச்சுறுத்தி வருகிறது.

சினாபங் கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. இதனால் எந்த நேரத்திலும் வெடித்து எரிகுழம்பை கக்கலாம் என்பதால், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 30 ஆயிரம் மக்கள் முன்னெச்சரிகையாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் எரிமலை இன்று காலை திடீரென வெடித்து எரிகுழம்பை கக்கியது. எரிமலை வெடித்த வேகத்தில் சாம்பல் துகள்கள் 16,400 அடி உயரத்திற்கு பறந்தன. மேலும் சாம்பல் துகள்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஏற்பட்ட எரிமலை வெடிப்பில்  எந்தவிதமான உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படவில்லை என்று இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் தீங்கு குறைப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்