உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2020-09-16 01:10 GMT
ஜெனீவா, 

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஏறத்தாழ 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் தொற்று பரவல் சில நாடுகள் இன்னும் வேகமாகவே உள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 கோடியே 15 லட்சத்து 22 ஆயிரத்து 606 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 38 ஆயிரத்து 388 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 72 லட்சத்து 53 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 866 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 67,87,665, உயிரிழப்பு - 2,00,174, குணமடைந்தோர் - 40,61,903
இந்தியா       -    பாதிப்பு - 50,18,034, உயிரிழப்பு -   82,091, குணமடைந்தோர் - 39,39,111
பிரேசில்       -    பாதிப்பு - 43,84,299, உயிரிழப்பு - 1,33,207, குணமடைந்தோர் -  36,71,128
ரஷியா        -    பாதிப்பு - 10,73,849, உயிரிழப்பு -  18,785, குணமடைந்தோர்  -  8,84,305
பெரு         -     பாதிப்பு -  7,38,020, உயிரிழப்பு -  30,927, குணமடைந்தோர்  -  5,80,753

மேலும் செய்திகள்