அக்டோபர் மத்தியில் நாள் ஒன்றுக்கு 50,000 கொரோனா பாதிப்புகள்- இங்கிலாந்து அரசின் ஆலோசகர் எச்சரிக்கை

அக்டோபர் மத்தியில் நாள் ஒன்றுக்கு 50,000 கொரோனா பாதிப்புகள்- இங்கிலாந்து அரசின் ஆலோசகர் எச்சரிக்கை

Update: 2020-09-21 15:18 GMT
லண்டன்

இங்கிலாந்தில் இனிமேலும் உரிய நடவடிக்கை எடுக்க தாமதித்தால் அக்டோபர் மத்தியில் நாள் ஒன்றுக்கு 50,000 கொரோனா பாதிப்புகள் உறுதி என அரசின் முக்கிய ஆலோசகர் எச்சரித்துள்ளார்.இதனால் நாள் ஒன்றுக்கு 200 மரணங்கள் நிகழ்வதையும் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்றும் சர் பேட்ரிக் வாலன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் ஞாயிறு மட்டும் புதிதாக 3,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.சிகிச்சை பலனின்றி 18 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையிலேயே சர் பேட்ரிக் வாலன்ஸ் இங்கிலாந்து அரசை எச்சரித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் ஒவ்வொரு ஏழு நாட்களிலும் தொற்றுநோய் இரட்டிப்பாகிறது என கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதே நிலை நீடித்தால் அக்டோபர் மத்தியப் பகுதியில் இங்கிலாந்தில் நாள் ஒன்றுக்கு 50,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி என வாலன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நவம்பர் மத்தியப்பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 200 மரணங்களை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையை முறியடிக்க துரிதமான நடவடிக்கை தேவைப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்