உலக மக்கள் தொகையில் 10% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்- உலக சுகாதார அமைப்பு

உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2020-10-06 02:04 GMT
ஜெனீவா,

உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவா் மைக்கேல் ரையன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக உலக சுகாதார அமைப்பின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில்  பேசிய அவா் கூறியதாவது:- கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து விரிவடையும். எனினும் அந்தத் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தவும், உயிா்களை காக்கவும் வழிகள் உள்ளன. இதுவரை பலா் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல உயிா்களை காப்பாற்ற முடியும்.

தற்போதைய மதிப்பீட்டின்படி, உலக மக்கள்தொகையில் சுமாா் 10% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தொற்று தொடா்ந்து பரவி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. தெற்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது” என்றார்

மேலும் செய்திகள்