தாய்லாந்தில் அவசர நிலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

தாய்லாந்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2020-10-21 21:39 GMT
பாங்காங்,

தாய்லாந்தில் பிரதமர் பிரயுத்  சான் - ஓச்சா பதவி விலக வேண்டும், அரசமைப்புச் சட்டத்திலும் மன்னராட்சி முறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் பாங்காங்கில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எனினும், போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

இதற்கு மத்தியில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தலைநகர் பாங்காக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலையை ரத்து செய்யக்கோரி மாணவர் அமைப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் செய்திகள்