தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் ரிக்டர் 6.0 அளவிலான நிலநடுக்கம்

தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் இன்று ரிக்டர் 6.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2020-10-28 17:27 GMT
சாண்டியாகோ,

தென் அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சிலி நாட்டில் இன்று இரவு 8:23 மணியளவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலி தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள நாடு ஆகும். இதனால் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வந்தது.

இந்நிலையில் இது குறித்து அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்.சி.எஸ்) வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுனாமி அபாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்